• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

March 15, 2019 தண்டோரா குழு

கோவை பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கோவை பொள்ளாச்சி பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் அளித்தாக சதீஸ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சபரிராஜன் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். பின் இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி சிபிசிஐடி இடம் மாற்றப்பட்டது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை இன்று காலை கோவை ஒருங்கிணைந்த நிதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாக இருந்தது. ஆனால் இந்திய மாணவர் சங்கம்,மாதர் சங்கம்,திமுக மகளீர் அணி ஆகியோர் அவரை தாக்குவதற்கும் முற்றுகையிட்டு கோசங்கள் அனுப்புவதற்கும் தயாராக இருந்ததால் கைதின் பாதுக்காப்பு கருதி காவல்துறையினர் காத்திருந்தனர்.

ஆனால் மதியம் தீர்க்கும் பிறகும் கூட்டம் குறையாததால் மாலை 4 மணி அளவில் காணொளி மூலம் திருநாவுக்கரசரை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதன் பெயரில் ஆஜர்படுத்தப்பட்ட பின் நான்கு நாட்கள் திருநாவுக்கரசரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதுகுறித்து பெண் வழக்கறிஞர் பேசுகையில்,

காலை முதலேயே திருநாவுகரசரை ஆஜர் படுத்துவதாக இருந்தது ஆனால் பாதுகாப்பின்மை காரணமாக ஆஜர்படுத்தவில்லை வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றவாளியை ஆஜர் படுத்தினார். மேலும் மார்ச் 18ம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார் என்றார்.

மேலும் படிக்க