• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பையில் ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது : 3 பேர் உயிரிழப்பு; 34 பேர் காயம்

March 14, 2019 தண்டோரா குழு

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நடைமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள பயணிகள் மேம்பாலம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. மாலை நேரத்தில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் பலர் காயமடைந்தனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேர் உயரிழந்தனர். 34 பேர் காயம் காயமடைந்துள்ளனர். பாலம் இடிந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கிய உள்ளனர். தற்போது அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என மும்பை போலீசார் தெரிவித்தனர்.

பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாகவே பாலம் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தேரி மையத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்படி போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

மேலும் படிக்க