• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீடு சிபிசிஐடி போலீசார் சோதனை

March 14, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீடு சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தலைமையிலான அதிகாரிகள் முதல்கட்ட ஆய்வு நடத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீடு ஆனைமலை சாலையில் உள்ள சின்னப்பன் பாளையத்தில் உள்ளது. இந்த பண்ணை வீட்டில் தான் இவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு பெண்களை உட்படுத்தி உயிர் வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த பண்ணை வீட்டில் இன்று ஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்பி நிஷா ஆகியோர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு முதற்கட்ட ஆய்வு நடத்தியது. அந்த பண்ணை வீட்டின் கதவு உடைக்கப்பட்டது காரணம் போன்றவற்றை விசாரித்து சென்றனர். இந்த ஆய்வு மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டிற்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இல்லை என்றால் அந்த வீட்டில் உள்ள சாட்சிகள் கலைக்கப்படலாம் என்ற கோணத்தில் இரண்டு காவல் அதிகாரிகள் 24 மணி நேரம் திருநாவுக்கரசன் பண்ணை வீடு காவல் பாதுகாப்பில் இருக்க ஐஜி ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க