• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்

March 12, 2019 தண்டோரா குழு

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சில நேரங்களில், சிபிஐ வசம் வசம் ஒப்படைக்க தமிழக அரசு பரிந்துரை செய்ப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் பல, இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு கண்டனமும், ஆர்ப்பாட்டமும், ஆளும் கட்சி பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கை திசை திருப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண்ணின் சகோதரர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல் பரப்பபடுவதாக வேதனை தெரிவித்த அவர், தங்களது குடும்பத்தை களங்கப்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்பபடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க