• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உங்கள் வாக்குகள் ஆயுதங்கள் போன்றவை கேள்வி கேளுங்கள் – பியங்கா காந்தி

March 12, 2019 தண்டோரா குழு

உங்கள் வாக்குகள் ஆயுதங்கள் போன்றவை. கேள்வி கேளுங்கள் என பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், இன்று வாத்ரா குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய பியங்கா காந்தி கடுமையான பல விமர்சனைகளை முன்வைத்தார். அதில் ” உங்கள் வாக்குகள் ஆயுதங்கள் போன்றவை. கேள்வி கேளுங்கள். உங்கள் விழிப்புணர்வே நாட்டின் சேவை. இந்த நாடு விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கானது. நீங்கள்தான் இந்நாட்டினை பாதுகாக்க வேண்டும். இன்று நாட்டின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஜராத் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும், பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் நலன் போன்றவற்றிக்கு நங்கள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். மோடியின் அரசு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. நம் கொள்கைகள் சிதைக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் வெறுப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலை காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் மாறும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க