• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு – பொதுப்பணித்துறை

March 11, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 3.41 மீட்டர் உயர்ந்து உள்ளது பொதுப்பணித் துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவையில் கடைசியாக மழை பெய்து நான்கு மாதங்கள் கடந்து விட்டன. எனினும் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் கோவையில் நிலதத்தடி நீர்மட்டம் உயர்ந்தே காணப்படுகிறது. குறிப்பாக 12.20 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், இந்த ஆண்டு பிப்ரவரியில் 15.61 மீட்டராக உயர்ந்து உள்ளது, பொதுப்பணித் துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு கோவையில் கடந்தாண்டு பெய்த கோடை மழையும், தொடர்ந்து பெய்த தென் மேற்கு பருவமழையும் முக்கிய காரணமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்தாண்டு கோவை மாவட்டத்தில் 244 சதவீதம் கூடுதலாக மழை பெய்து உள்ளது. இந்த மழை கோவை மாவட்டத்திற்கு தற்போது பயனுள்ளதாக அமைந்து உள்ளது. இருப்பினும் நான்கு மாதங்களாக மழைப்பொழிவு இல்லாத சூழலில், கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

மேலும் படிக்க