• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக கூட்டணியைப் பார்த்து மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் உள்ளார் – முதல்வர் பழனிசாமி

March 9, 2019 தண்டோரா குழு

அதிமுக கூட்டணியைப் பார்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிரண்டு போய் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,

அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்கட்சிகள் சதி செய்து வருகிறது. அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும். பாலில் ஒரு துளி விஷம் பட்டால்கூட பால் கெட்டு விடும். அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி, தேர்தலை சந்திக்க வேண்டும். அதிமுக கூட்டணியை பார்த்து என்னென்ன வார்த்தைகள் பேசக் கூடாதோ அத்தனை வார்த்தைகளையும் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல கூட்டணியை அமைத்து உள்ளோம். இந்த சந்தர்ப்பம் என்றைக்கும் கிடைக்காத சந்தர்ப்பம். ஏனென்றால், எதிர்பார்த்தபடி பல பேர் மத்தியில் நம் அணியைச் சேர்ந்தவர்கள் பொறுப்புக்கு வருவார்கள் பிரகாசமான வாய்ப்புள்ளது என்றார்.

மேலும், கட்சியும் மலரும் ; தமிழ் நாடும் வளரும். எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் சில கட்சிகள் புதிதாக கூட்டணி சேர விரும்புகிறார்கள். இந்த கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க