• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவையில் மனிதசங்கிலி போராட்டம்

March 9, 2019 தண்டோரா குழு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, கோவையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தாமதமின்றி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்பட 8 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நஞ்சப்பா சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் தபெதிக, சிபிஐ, அமமுக, விசிக, திவிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பறையடித்தும், எழுவரை விடுதலை செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர். தமிழக அமைச்சரவை தீர்மானப்படி தமிழக ஆளுநர் காலதாமதம் செய்யாமல் விடுதலை கோப்பில் கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்திய போராட்டக்காரர்கள், இல்லையெனில் இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றனர்.

மேலும் படிக்க