• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 100 டிகியை தொடும் வெயில் மக்கள் அவதி

March 8, 2019 தண்டோரா குழு

கோவையில் 100டிகிரியை தொடும் அளவிற்கு வெயில் அடிப்பதால் மக்களுக்கு அன்றாட‌ செயல்களை செய்வதே கடினமாக உள்ளது.

கோவை மாவட்டத்திற்கு அதன் குளுமைக்காகவே பல ஊர்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து தங்குவது வழக்கம். ஆனால் தற்போது கோடை மாதம் துவங்குவதற்கு முன்பாகவே 100டிகிரியை தொட உள்ளது. கோவையில் தற்போது வெயில் அதிகமாகி கொண்டே உள்ளது மே மாதம் அடிக்கும் வெயில் மார்ச் மாதமே அடிக்கிறது. இதனால் அன்றாட‌ செயல்களை செய்வதே கடினமாக உள்ளது.

காலை 11 மணி முதல் 4 மணி வரை வெளியே வரவே முடியவில்லை. அதிக அளவில் இளநீர் மற்றும் பழச்சாறு குடிக்கவேண்டி உள்ளது இதை பயன்படுத்தி வியாபாரிகளும் விலை அதிகமாக விற்பனை செய்வதாக கடிந்து கொண்டனர்.

மேலும் படிக்க