• Download mobile app
07 Mar 2026, SaturdayEdition - 3678
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

September 23, 2016 தண்டோரா குழு

முதல்வர் ஜெயலலிதா,திடீரென உடல்நலக்குறைவால் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக நேற்று இரவு, 11:30 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள, சிறப்பு சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளித்தனர்.மூத்த டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினரால், முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தற்போது அவர் நலமாக உள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அமைச்சர்கள் ,அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

மேலும் படிக்க