• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய நாட்டை ஆளும் தகுதியுள்ள ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் – இபிஎஸ்

March 6, 2019 தண்டோரா குழு

இந்திய நாட்டை ஆளும் தகுதியுள்ள ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெறும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், என்.ஆர் காங். தலைவர் ரங்கசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்

பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி பேசுகையில்,

நாம் இங்கு பத்திரமாக, நிம்மதியாக வாழ, மத்தியில் வலிமையான பிரதமர் இருப்பதே காரணம். இந்திய நாட்டை ஆளும் தகுதியுள்ள ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான்.5 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு சென்று, நமது நாட்டின் பெருமையை வெளிப்படுத்தினார். பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்த போது, நமது ராணுவத்திற்கு ஆதரவாக உலக நாடுகளும் குரல் கொடுத்தது. இதற்கு பிரதமர் மோடி இரவு பகலாக உழைத்ததே காரணம். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அபிநந்தனை விரைவாக மீட்டவர். கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசியை பிரதமர் கட்டுக்குள் வைத்திருந்தார். சிறு குறு விவசாயிகள் மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் மூலம் , தமிழகத்தில் 25 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். நமது கூட்டணி இயற்கையான கூட்டணி. மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி.பிரதமரை மீண்டும் தேர்வு செய்ய உழைப்போம். பாரதம் வளம் கொழிக்கும் பூமியாக வேண்டுமானால், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

மேலும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க