• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எத்தனை தீவிரவாதிகள் இறந்தார்கள் என கணக்கு கேட்பவர்களுக்கு நான் அளிக்கும் ஒரேபதில் – நிர்மலா சீதாராமன்

March 5, 2019 தண்டோரா குழு

தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் இந்தியா நடவடிக்கை எடுக்கிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.

பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு ஓய்வூதிய திட்ட அடையாள அட்டையை 10 தொழிலாளர்களுக்கு வழங்கினார். பின்னர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் எத்தனை தீவிரவாதிகள் இறந்தனர் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் கூற மறுத்த அவர், இவ்விகாரத்தில் வெளியுறவு செயலாளரின் அறிக்கையே மத்திய அரசின் நிலைப்பாடு. விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரமாக சாட்டிலைட் புகைப்படம் உள்ளதா என்பது பற்றி தெரிவிக்க இயலாது.பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பாக கணக்கு கேட்பவர்களுக்கு நான் அளிக்கும் ஒரேபதில் என்னவென்றால், வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்புதான் இந்தியாவின் நிலைப்பாடு என்பதாகும். பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப் படைகள் நடத்திய தாக்குதலை ராணுவ நடவடிக்கையாக பார்க்க கூடாது. பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இயங்கி வரும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தொடர்பாக பல்வேறு முறை ஆதாரங்களை அளித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசை நாம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். ஆனால், அவர்கள் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் மேலும் ஒரு பெரிய தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

நாட்டை காப்பாற்ற தீவிரவாத தாக்குதல்களை தடுக்கவே சர்ஜிக்கில் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. அபிநந்தன் மீண்டும் போர் விமானம் இயக்குவாரா என்பது குறித்து மருத்துவர்களும், விமானப்படை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள். தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் இந்தியா நடவடிக்கை எடுக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க