• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

March 4, 2019 தண்டோரா குழு

திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை திமுக கூட்டணிக்கு ஆதரவு என இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கூறியிருந்தார். இந்நிலையில்,சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஐ.ஜே.கே. நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.திமுக, இந்திய ஜனநாயக கட்சி இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ஐ.ஜே.கே.விற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் ஐ.ஜே.கே போட்டியிடும் என்று ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க