• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கஞ்சா விற்பனை செய்த சிறுவர்களை கண்டித்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் – ஆட்சியரிடம் புகார்

March 4, 2019 தண்டோரா குழு

கஞ்சா விற்பனை செய்த சிறுவர்களை கண்டித்ததால், கொலைவெறி தாக்குதல் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை வடவெள்ளி ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பசுபதி, இந்திரன், மூர்த்தி. இவர்கள் அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த வீரா மற்றும் செல்வக்குமார் ஆகிய இருவரும் சிறுவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 2 ஆம் தேதி சிறுவர்கள் பசுபதி, இந்திரன், மூர்த்தி ஆகியோர் மீண்டும் கஞ்சா விற்பனை செய்து கொண்டுள்ளனர். குணா , வல்லரசு, விஜய் ஆகிய மூன்று பேரும் கஞ்சாவை பயன்படுத்தி கொண்டு இருந்துள்ளனர். அப்போது வீரா மற்றும் செல்வக்குமார் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்யக்கூடாது என்று கூறியதை அடுத்து 6 சிறுவர்களும் சேர்ந்து இரும்பு கட்டை மற்றும் மரக்கட்டையால் தாக்க்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் 108 அவசர ஊர்தி மூலம் , அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வடவெள்ளி காவல் துறைக்கு புகார் அனுப்பபட்டும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாகக்கூறி, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்ப்புலிகள் அமைப்பு சார்பாக புகார் மனு அளித்தனர்.

மேலும் படிக்க