• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மஹா போஸ்டர் சர்ச்சை: ஹன்சிகா மீது எடுத்த நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்றம் கேள்வி

March 2, 2019

மஹா போஸ்டர் சர்ச்சையில் ஹன்சிகா மீது எடுத்த நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹா’ படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளையும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் நடிகை ஹன்சிகா மீதும் இயக்குனர் ஜமில் மீதும் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில், புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை ஹன்சிகா மீதான புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன? – 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க