• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகிலேயே மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையின் எடையில் முன்னேற்றம் : 3 கிலோ 200 கிராமாக உயர்வு

March 1, 2019 தண்டோரா குழு

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் அமைந்துள்ளது கீயு பல்கலைக்கழக மருத்துவமனை. இங்கு, மருத்துவ பரிசோதனைக்காக கர்ப்பிணி பெண் ஒருவர் வந்திருந்தார். இதையடுத்து, அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவரது வயிற்றில் உள்ள குழந்தைக்கு போதிய வளர்ச்சி இல்லை என்பது தெரியவந்தது.

முன்னதாக, அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் குறைப்பிரசவமாக 6 மாதத்தில் குழந்தை பிறந்ததுள்ளது. 268 கிராம் மட்டுமே இருந்த அந்த ஆண் குழந்தையை மருத்துவர்கள் முதல் அனைவரும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதிக எடையில்லாத அந்த குழந்தை, இரு உள்ளங்கைகளுக்குள் அடங்கும் அளவில் இருந்துள்ளது. சொல்லப் போனால், பெரிய வெங்காயத்தின் அளவில் அந்த குழந்தை இருந்ததுள்ளது.

இந்த அடையாளத்தின் அடிப்படையில், அந்த குழந்தை உலகிலேயே மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என பெயர் பெற்றது. இதையடுத்து, மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ச்சியான, இந்த சிகிச்சையின் பலனாக, 5 மாதங்களில் அந்த குழந்தையின் எடை 3 கிலோ 200 கிராமாக உயர்ந்ததுள்ளது. மேலும், பிற குழந்தைகளைப் போல நலமாக இருக்கும் அந்த குழந்தை, தற்போது மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க