• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒருமித்த கருத்துக்களை கொண்டவர்கள் – ஓ பி எஸ்

March 1, 2019 தண்டோரா குழு

கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், மோடியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒருமித்த கருத்துக்களை கொண்டு திட்டம் தீட்டியுள்ளனர் என பாராட்டியுள்ளார்.

கன்னியாகுமரியில் இன்று பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முத‌ல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இன்று பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அரசின் சார்பில் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், புதிய திட்டங்களை துவக்கியும் வைத்தார் பிரதமர் மோடி. இதில் சென்னை எழும்பூர் – மதுரை இடையே தேஜஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் இணைப்பை புதுப்பிக்க அடிக்கல் நாட்டினார். மேலும் இதையடுத்து பணகுடி-கன்னியாகுமரி சாலை, மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையாயும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம்,

” நரசிம்ம அவதாரம் எடுத்தது போல பிரதமர் மோடி பயங்கரவாதிகளை வதம் செய்துகொண்டிருக்கிறார். விரைவில் பெறவுள்ள இமாலய வெற்றிக்கான துவக்க விழா தான் இந்த விழா. மோடியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒருமித்த கருத்துக்களை கொண்டு திட்டம் தீட்டியுள்ளனர்” என பேசியுள்ளார்.

மேலும் படிக்க