• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் பிடியில் இருந்த விமானி அபிநந்தன் வாகா வந்தடைந்தார்!

March 1, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லைக்கு வந்தடைந்தார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து,பாகிஸ்தான் விமானம் எப்16 இந்தியாவின் வான் எல்லையில் பறந்தது. அதனை பின்தொடர்ந்து துரத்தி இந்திய மிக் 21 ரக விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது. பின்னர் திரும்பும் வழியில் இந்திய விமானத்தை பாகிஸ்தான் தாக்கியது. அப்போது, இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யபட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை வைத்தனர். அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என இந்தியா சார்பில் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார்.

இந்தநிலையில், பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வாகா எல்லைக்கு வந்தடைந்தார். அபிநந்தனை வரவேற்க வரவேற்க்க நாடு முழுவதும் உள்ள மக்கள் தயாராக உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லையில் ஏராளமானோர் அவரை வரவேற்க்க குவிந்துள்ளனர்.

மேலும் படிக்க