• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மயங்கிய விழுந்த அமைச்சர்

February 26, 2019 தண்டோரா குழு

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீரென மேடையிலேயே மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 35 வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் கலந்துக்கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, நிகழ்ச்சியின் உறுதிமொழியேற்பு போது அமைச்சர் அன்பழகன் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்த காவல் துறை உடனடியாக தண்ணீர், சர்க்கரை உள்ளிட்டவற்றைக் கொடுத்து அவரை தேற்றினர்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் அமைச்சர் மயங்கியதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீரென மேடையிலேயே மயங்கியதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க