• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் உள்ள மலபார் கோல்டு நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

February 26, 2019 தண்டோரா குழு

கோவை உள்ளிட்ட 65 பிரபல மலபார் கோல்டு தங்க மற்றும் வைர நகை கடையில் வருமானவரித்துறை சோதனை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் 65 மலபார் கோல்ட் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில், கோவை 100 அடி சாலையில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனத்தில் அதிகாலை 7 மணி அளவில் மூன்று வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த வருடம் இந்நிறுவனம் சார்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சென்னை, கோழிக்கோடு ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மலபார் கோல்டு
நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் மொத்தம் 250க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மலபார் கோல்டு நகைக்கடைகளில் இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை கிளைகள் உட்பட மொத்தம் 64 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் அந்நிறுவனம சார்பில் வரி ஏய்ப்பின் மதிப்பு குறித்து விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.

அதிகாலை முதல் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக வாடிக்கையாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கடை ஊழியர்கள் இன்று யாரும் வேலைக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க