• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் ஒரு குண்டு போட்டால் இந்தியா 20 குண்டுகளால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையே அழித்து விடுவார்கள் – முஷாரப்

February 25, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு அணுகுண்டு போட்டால் இந்திய 20 அணுகுண்டுகளால் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே அழித்து விடுவார்கள் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இதனால் இந்தியா மக்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

அப்போது பேசிய அவர்,

இந்திய மீது பாகிஸ்தான் ஒரு அணு ஆயுதத்தை வீசினால், இந்தியாவோ 20 அணு ஆயுதத்தை விசி பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக அளித்துவிடும். எனவே, அணு ஆயுதப்போர் என்ற நிலை ஏற்பட்டால் இந்தியா மீது 50 அணு ஆயுதங்களை வீசி அவர்கள் எதிர் தாக்குதல் நடத்த முடியாதவாறு நாம் முதல் தாக்குதலை நடத்த வேண்டும். 50 அணு ஆயுதங்களை வீசி முதல் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க