• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த முருகானந்தம் நடித்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது !

February 25, 2019

கோவை முருகானந்தம் உருவாக்கிய மலிவுவிலை நாப்கினை மையப்படுத்திய படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

91-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இதில், இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவண படத்திற்கான ஆஸ்கர் விருது பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது.

கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார். அவ்வப்போது பல இடங்களுக்கு சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார். இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு ஆவணப்படம் எடுக்கப்பட்டது.கோவை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. இதில் முருகானந்தமும் நடித்து இருந்தார்.இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.

இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில், ‘இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ என கூறினார். இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் முருகானந்தம் கூறியுள்ளார்.

இந்த விருதை இயக்குநர் ரைகா ஜெஹ்ட்காப்சி (Rayka Zehtabchi) பெற்றுக் கொண்டார் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க