தமிழில் பிட்சா படத்தின் மூலம் அறிமுகவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். வித்தியாசமான கதையம்சத்துடன் பல்வேறு வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென்று இடத்தையும் பிடித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார்.இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு, தனுசை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது.ஆனால் இருவருமே வேறு படங்களில் பிசியாகிவிட்டனர். இதனால் அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அப்படம் கைவிடப்படவில்லை. தனுஷ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தற்போது முழுவீச்சில் கதை எழுதி வருகிறாராம். விரைவில் எழுத்துப் பணிகள் நிறைவுபெற்று ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. இதுமட்டுமின்றி படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு