• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எம்எல்ஏ கடும் வாக்குவாதம்

February 23, 2019 தண்டோரா குழு

கோவையில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டி வீதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் வசிக்கும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் போராட்ட இடத்திற்கு வந்த போது பொதுமக்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். அப்போது அம்மன் அர்ஜூனன் பொது மக்களிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்கு வாதம் அதிகரிக்கரிக்கவே கோபத்தின் உச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ பொது மக்களிடம் கடுமையாக பேசவே பதட்டம் அதிகரித்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த முன்னாள் தெற்கு மண்டலத்தலைவர் நாச்சிமுத்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியதை அடுத்து, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

தண்ணீர் கேட்டு போராடிய மக்களிடம், நீ வாடகை வீட்டில் தான் இருக்கிறீர்கள் , உனக்கு வீடு கிடைக்காது என ஒரு பெண்ணிடம், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜீனன் பேசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க