• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் இனி உங்கள் சொத்து என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

February 22, 2019 தண்டோரா குழு

நான் இனி உங்கள் சொத்து என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யம்
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,

” நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி சிந்தித்துக்கொள்ள வேண்டும். மக்களாகிய நீங்கள் முதலாளி என்று எண்ணுங்கள். நான் உள்பட அனைவரும் உங்களுக்கு வேலைக்காரா்கள் தான். நாட்டின் பிரதமா் என்பதை தோ்வு செய்யும் பெரும் பங்கு தமிழா்களுக்கு உள்ளது.

குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது. குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும். எனக்கும் குடும்பம் உள்ளது. ஆனால் எனது குடும்பம் சற்று பெரியது. அதில் 8 கோடி மக்கள் உள்ளனா்” என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க