• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா? – அமித்ஷா கேள்வி

February 22, 2019 தண்டோரா குழு

ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா? என பாஜக தேசிய தலவைர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்திற்கு இடம் அளிக்காது. தீவிரவாத செயலை பாஜக அரசு சகித்துக்கொள்ளாது. தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வலிமையாக பாஜக கூட்டணி போட்டியிடுகின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா? தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக போராட வேண்டும்; வெற்றிக்கான சபதத்தை ஏற்போம். இந்தியாவிற்கு பல நல்ல தலைவர்களை கொடுத்த பூமி தமிழகம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க பா.ஜ.க தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க