• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனி மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ் மணி தான் – அன்புமணி குறித்து ஸ்டாலின் விமர்சனம்

February 22, 2019 தண்டோரா குழு

மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ் மணி என அன்புமணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில், எம்.எல்.ஏ. சுதர்சனம் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து மேடையில் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

சுதர்சனம் மாம்பழத் தொழில் செய்து வருகிறார். ஆனால் சிலர் மாம்பழ சின்னத்தை வைத்துக்கொண்டு எப்படியோ வருமானம் ஈட்டுகின்றனர். கடல் தாண்டி ஊழல் செய்யும் கட்சியாக அதிமுக உள்ளது. அதிமுகவையும் முதல்வரையும் விமர்சித்து விட்டு பாமக – அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்த ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதன் மூலம், அக்கட்சி திராவிட இயக்கத்தை சேர்ந்தது இல்லை என்பதை நிரூபித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும், மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி என முழக்கம் வைத்தவர்கள், இனி மாற்றம்-ஏமாற்றம்-சூட்கேஸ்மணி என்றுதான் கூறிக்கொள்ள வேண்டும்.அதிமுக-பாமக கூட்டணி, மக்கள் விரோத கூட்டணி, பண நலனுக்கான கூட்டணி என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க