• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குட்டியுடன் ஊருக்குள் வந்த காட்டுயானை

February 21, 2019 தண்டோரா குழு

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் குட்டியுடன் திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் வாகனங்கள் மூலமாக ஒலி எழுப்பி வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் உள்ள காந்திநகரில் இரவு நேரத்தில் குட்டியுடன் காட்டு யானை ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் வாகனங்கள் மூலமாக ஒலி எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக இந்த காட்டு யானை குட்டியுடன் வலம் வருவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மதுக்கரை பகுதியில் கடந்த ஆண்டு காட்டு யானை ஊருக்குள் புகுந்து வந்த சூழலில், தற்போது மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க