• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் செங்கோட்டையன் உறவினர் எனக் கூறி மோசடி – பொதுமக்கள் புகார்

February 20, 2019 தண்டோரா குழு

செங்கோட்டையன் உறவினர் எனக்கூறி நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபரைக் கைது செய்து பணத்தைக் திரும்ப பெற்று தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றபிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை 100 அடி சாலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட முல்லை குரூப்ஸ் நிதி நிறுவனத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் துவக்கி வைத்துள்ளனர். இவர்கள் துவக்கி வைத்த புகைப்படம் மற்றும் வீடியோவைக் வைத்து அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் குறிஞ்சி நாதன் என்பவர் தனியார் லோக்கல் சேனல்களில் குறைந்த முதலீடு செய்தால் 20 முதல் 30 சதவீதம் வரை லாபத்தொகை தருவதாக உறுதியளித்து விளம்பம் செய்துள்ளனர். இதைக் நம்பி கோவையில் 100 க்கு மேற்பட்டோர் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் ஒரு வருடம் கழித்து சிலர் பணத்திற்கான லாபத்தொகையைக் கேட்டுள்ளனர். ஒரிரு மாதம் பொறுத்து கொள்ளவும் என்று கூறி அனுப்பியுள்ளனர். அநிநிறுவனத்தின் வேலை செய்யும் பணியாளர்கள்..ஒரு சிலர் பணத்தைக் திரும்ப கேட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பணியாளர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டார் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றபிரிவு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மேலும் படிக்க