• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வினோதமான கேம்!

February 20, 2019 தண்டோரா குழு

இணைய உலகில் பல முன்னேற்றங்கள் வந்த நிலையில், அதனுடன் தொழில்நுட்பமும் மடமடவென வளர்ந்து வருகிறது. புதுப்புது விளையாட்டு செயலிகள் குழந்தைகள், இளம் தலைமுறையினர் இடையே பரவிக் கிடக்கின்றன. அதில், தற்போது டாம்பன் ரன் என்ற விளையாட்டும் அடங்கும்.

இதில், அப்படி என்ன சிறப்பு என்றால், மாதவிடாய் பற்றிய தவறான கண்ணோட்டத்தைப் போக்கும் நோக்கில் இரு பள்ளி மாணவிகள் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த விளையாட்டில், லூனா என்ற பெண், தன் எதிரிகளுடன் போராடிக்கொண்டே ஓடுகிறாள். எதிரிகளின் பலவீனம் என்னவென்றால், அவர்கள் மாதவிடாயை வெறுப்பவர்கள்.

கிழவிகள் சொல்லும் கதைகளில், ஆண்கள் மாதவிடாய் வெறுப்புடன் இருப்பவர்கள் என சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதை தான் இந்த விளையாட்டில் மையப்படுத்தியிருக்கிறார்கள். அதில், ஓடும் லூனா தன் எதிரே வரும் அவர்களுடன் மோதிக்கொள்ளாமல் பயணிக்க வேண்டும். அப்போது, அவர்களை விலகிப்போக வைக்க அவர்களை நோக்கி நாப்கின்களை வீசலாம் அல்லது துள்ளிக்குதித்து அவர்கள் மீது மோதுவதைத் தவிர்க்கலாம். இடையிடையே கிடைக்கும் நாப்கின்களை துள்ளிக்குதித்து எடுத்துக்கொண்டே ஓட வேண்டும்.

இதில், எதிரே வரும் ஒருவர் மீது மோதினால் லூனாவிடமிருந்து இரண்டு நாப்கின்கள் குறைந்துவிடும். மோதாமல் ஒரு நாப்கினை வீசி விரட்டினால் லூனாவுக்கு விளையாட்டில் ஒரு புள்ளி கிடைக்கும். இந்நிலையில், நாப்கின் தீர்ந்துவிட்டால் லூனாவின் ஓட்டம் முடிந்துவிடும்.
இந்த விளையாட்டு, ஆண்கள் மத்தியில், மாதவிடாய் இயற்கையான நிகழ்வுதான் என்பதை புரிய வைக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க