• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புல்வாமா தாகுதலில் வீர மரணமடைந்த வீரர்களின் கடன் தள்ளுபடி – எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு

February 19, 2019 தண்டோரா குழு

புல்வாமா தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களின் வங்கிக்கடன் முழுமையாக ரத்து செய்து அவர்களுக்கு காப்பீடுத் தொகையாக தலா. ரூ.30 லட்சம் வழங்குவதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 14 தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்தியவை சேர்ந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரண மடைந்தனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்துக்கு பல்வேறு உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலியான வீரர்களில் இதில் 23 வீரர்கள் ஸ்டேட் வங்கியில் கடன் பெற்றிருந்தனர் அவர்களது கடன் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்வதாகவும் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இது மட்டுமின்றி, அந்த வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் காப்பீடுத் தொகையாக ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார்,

“நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஸ்டேட் வங்கி மூலம் சிறிய உதவியாக இதை செய்கிறோம்.” ஸ்டேட் வங்கி ஊழியர்கள் தாமாக முன்வந்து பாரத் கீ வீர் இணையதளம் மூலம் நிதி உதவி வழங்கவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க