வேதாந்தா குழுமத்தின் சார்பாக புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ருபாய் 10 லட்சம் நிதியுதவி வழகப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலை படை தாக்குதலில், இந்திய வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனையேடுத்து தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு
தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகிக்கும் வேதாந்தா குழுமத்தின் சார்பாக புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், பலியான வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
” ஷேமா கிசான் சாத்தி “திட்டத்தை வழங்குவதற்கு கரூர் வைசியா பேங்க் மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் கூட்டாண்மை
கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர்கள் தினத்தை கொண்டாடியது
கதைகள் நன்றாக இருந்தாலே படத்தை தானாக மக்கள் அங்கீகரிப்பார்கள் – நடிகர் அருண் பாண்டியன்
தென்னிந்தியாவில் தனது வணிக நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துகிறது ஆர்.எஸ்.டபிள்யூ.எம். நிறுவனம்