• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் இன்று நினைக்ககூடாது – பியூஸ் கோயல்

February 19, 2019 தண்டோரா குழு

எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் இன்று நினைக்ககூடாது என பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை முடிந்த பின்னர் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கோயலுடன் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதரவ் ராவ் ஆகியோர் உடனிருந்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின்பு பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர்,

இந்த சந்திப்பிற்கு பின் எந்த அரசியலும் கிடையாது. மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாஜக தேமுதிக தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு தொடர்ந்து நடந்து வருகிறது. எல்லா சந்திப்பிலும் அரசியலே இருக்கும் இன்று நினைக்ககூடாது. தனிப்பட்ட முறையில் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் பெற வாழ்த்துகூறவே வந்தேன். பிரதமர் மோடி விஜயகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மட்டுமே நாங்கள் பேசினோம். விஜயகாந்த் என்பது பழைய நண்பர்: எங்கள் நட்பும் எங்களுக்கு முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க