• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதாக புகார்

February 19, 2019 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து மருத்துவமனையின் முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 11.7.18 அன்று பிரசவத்திற்க்காக இருதய நோய் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 8.2.19 அன்று மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் இருவருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இல்லாதது மருத்துவசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வேறு எங்கும் குழந்தையினை சிகிச்சைக்காக அழைத்து செல்லவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் கோவை அரசு மருத்துவமனையில் இரத்தம் ஏற்றப்பட்டதில் பிரச்சினை இருந்திருக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.

பெற்றொரின் புகாரை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் விசாரணை நடத்தி வருகிறார்.
குழந்தையின் தந்தை D.விஸ்வநாதன் மற்றும் வழக்கறிஞர் K.சாரதி,மக்கள் கண்காணிபகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் செய்தியாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு திருச்சியை சேர்ந்த விசுவநாதன் என்பவற்கு அரசு மருத்துவமனையில் இரட்டை குழந்தை பிறந்தது இதன்பின் இம்மாதத்தில் குழந்தையின் தந்தை விசுவநாதன் தன்னுடைய குழந்தைக்கு இருதய கோளாறுகள் இருப்பதாக கண்டறிந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர் .அப்போது குழந்தைக்கு ரத்தம் குறைவாக இருப்பதனால் கூடுதலாக ரத்தம் ஏற்றப்பட்டது ஒரு மாதத்திற்கு பின்பு குழந்தையின் உடல் முழுவதும் சிறு சிறு கட்டிகள் வந்தது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளும்போது குழந்தைக்கு எச் ஐ வி இருப்பதாக சான்றிதழுடன் உறுதி அளிக்கப்பட்டது. குழந்தையின் தாயார் மற்றும் தந்தை இரண்டு குழந்தைகளை பரிசோதனை மேற்கொள்ளும் போது ஒரு குழந்தைக்கு மட்டும் எச்ஐவி இருப்பது உறுதியளிக்கப்பட்டது.

குழந்தைக்கு எச்ஐவி வந்ததற்கு காரணம் அரசு மருத்துவமனையை என்று குற்றம் சாட்டினர். இதுவரை முழமையாக அரசு மருத்துவமனையை நாடியே சிகிச்சை பெற்றதாகவும் தனியார் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று கூறினார். இதற்கு காரணமாக இருந்த அரசு மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தைக்கு அதி நவீன தீவிர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க