• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக – பாமக கூட்டணி உறுதி – தொகுதிகள் ஒதுக்கீடு !

February 19, 2019 தண்டோரா குழு

அ.தி.முக கூட்டணியில் பா.ம.கவுக்கு 7 தொகுதிகள்; ஒரு மாநிலங்களவை எம்.பி ஒன்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு அடுத்தமாதம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டணி அமைக்க ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் உருவாகவுள்ளது.

திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதைப்போல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இடம்பெறும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி குறித்து இன்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முறைப்படியான கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அவரது வருகை திடீர் என ரத்து செய்யப்பட்டது.ஆனால் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மதியம் தமிழகம் வர உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இன்று காலை அதிமுக தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஓட்டலுக்கு டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க நிர்வாகிகள் வருகை தந்த அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் இரு கடசி தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திட்டு உள்ளன.

பின்னர் அ.தி.மு.க – பா.ம.க தலைவர்கள் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,

அ.தி.மு.க கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பா.மகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ம.க, அ.தி.முகவுக்கு ஆதரவு அளிக்கும் என கூறினார்.

மேலும் படிக்க