February 18, 2019
தண்டோரா குழு
‘ஊமை விழிகள்’ படம் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் அருண் பாண்டியன். அதன்பின் அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இதுமட்டுமின்றி, தேவன் என்னும் படத்தை இயக்கி நடித்தும் உள்ளார். பின்னர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்ட அவர் 2011 தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகவும் இருந்தார். மேலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்தையும் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழ் படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் இப்படத்தில் கனா திரைப்படத்தில் நடித்த தர்ஷன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.