• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்றம், சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா இணைந்து போட்டி

February 18, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ. – சிவசேனா கூட்டணி உறுதியானது.

மஹாராஷ்டிராவில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் சிவசேனா இருந்தாலும் தொடர்ந்து மத்திய அரசை சிவசேனா விமர்சித்து வந்தது. மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் இக்கூட்டணி தொடர பா.ஜ. முயற்சித்து வந்தது. இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள பன்ட்ரா பகுதியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டியது. இந்நிலையில் இரு கட்சிகளிடையே கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்தார். மேலும், இதன்படி மொத்தமுள்ள 48 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ. 25 தொகுதிகளிலும், சிவசேனா23 தொகுதிகளிலும் தொகுதி பங்கீட்டு செய்து கொள்வது என கூறினார்.

மேலும்,சட்டசபை தேர்தலில் 50-50 என போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க