• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ய நாளை சென்னை வருகிறார் அமித்ஷா?

February 18, 2019 தண்டோரா குழு

அதிமுகவுடன் மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகை என தகவல் வெளியாகியுள்ளது.

மக்களைவை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் என்ற நிலையே உள்ளது. இதில் திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ் உள்ளது உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க., பா.ஜ. கூட்டணி தொடர்பாக தமிழக பா.ஜ. பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் கடந்த 14-ம் தேதி சென்னை வந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை (பிப்.19) சென்னை வருவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 22-ம் தேதி அமித்ஷா ராமேஸ்வரம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையே அவர் சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க