• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூடான் நாட்டின் அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து கோவையில் சுடான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

February 18, 2019 தண்டோரா குழு

சூடான் நாட்டின் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து சூடான் நாட்டு மாணவர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் உள்நாட்டுப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு அந்நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பல்வறு மாவட்டங்களில் சூடான் நாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ள கோவையில் சூடான் நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் தங்களது சொந்த நாடான சூடானின் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீரை கண்டித்து கோவையில் வரும் வெள்ளக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த அனுமதி கோரி கோவை மாநகர காவல் துறை ஆணையரை சந்தித்த
மாணவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய அவர்கள்,

போர்க் குற்றம், இனப் படுகொலை ஆகிய குற்றங்களில் தற்போதைய அதிபர் ஒமர் அல் பஷீர் ஈடுபட்டு வருவதாகவும், எனவே சூடான் நாட்டின் நலன் கருதி அதிபர் பதவி விலக கோரி கோவையில் கல்வி பயிலும் சூடான் நாட்டு மாணவர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதிபரை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க