• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா தாக்குதல் பயங்கரவாதியை விடுதலைப் போராளியாக கொண்டாடும் பாகிஸ்தான் ஊடகங்கள்

February 16, 2019 தண்டோரா குழு

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 வீரர்களின் உயிர்களை பறித்த பயங்கரவாதியை விடுதலைப் போராளியாக சித்தரித்து பாகிஸ்தான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென நாடு முழுக்க குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் மக்களின் மனநிலையும் நிலைப்பாடும் எதிர்மாறாக உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் நாளேடுகளிலும், தொலைக்காட்சி உள்ளிட்ட பிற ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஏற்கனவே ‘ஜெய்ஷ்-இ-முஹம்மத்’ பயங்கரவாத அமைப்பு அறிவித்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரின் பெயர் மற்றும் புகைப்படம் அனைத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த அமைப்புக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை சித்தரிப்பாக நிரூபிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான நாளேடான ‘தி நேஷன்’ பத்திரிகை புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை விடுதலைப் போராளி என்று தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை கொண்டாடும் நோக்கத்தில் ஊடகங்கள் இச்செய்தியை வெளியுட்டுள்ளது .

மேலும் படிக்க