• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் பழி சுமத்தலாமா? – நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சை கேள்வி

February 15, 2019 தண்டோரா குழு

புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையும், மக்களையும் நாம் பழிசுமத்தலாமா? பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சை கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகாரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு இதற்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நாடுமுழுவதில் இருந்தும் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளன.

மேலும், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து புல்வாமா தாக்குதல் குறித்து நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில் ” புல்வாமாவில நமது ராணுவத்தினர் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது, அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள ஒரு தீவிரவாத குழு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஆனால், குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையும், மக்களையும் நாம் பழிசுமத்தலாமா? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க