• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய த. பெ.தி.க அமைப்பினர்

February 14, 2019 தண்டோரா குழு

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காதலர் தினவிழா கலப்புமணம் புரிந்தவர்கள் நலச்சங்கத்தினர் தங்களது இணைகளோடு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கலப்பு திருமணம் புரிந்தவர்கள் நலச்சங்கத்தினர் , காதலர் நாளை சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் காதல் திருமணம் புரிந்தவர்கள் தங்களது குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில் ,

உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இயற்கையாக இருக்கக்கூடிய உணர்வு என என்றார்.

மேலும், இந்தியாவில் தான் , காதலர்களுக்கு எதிராக சாதிய, மத வெறியர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு அரசு இடஒதுக்கீடு வழங்கி அவர்களை பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அவசர சட்டம் இயற்றி காதலர்கள் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க