• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லி தீ விபத்தில் உயிரிழந்த திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் உடல் கோவை கொண்டு வரப்பட்டது

February 14, 2019 தண்டோரா குழு

டெல்லி உணவு விடுதியில் நடந்த தீ விபத்தில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி அவர்களது உடல்கள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.

டெல்லியில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் நடந்த தீ விபத்தில் திருப்பூர் தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியர்கள் இரண்டு பேர் பலியான சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் பனியன் நிறுவனத்தில் பனியாற்றும் அவிநாசி சாலை அம்மாபாளையத்தை சேர்ந்த அரவிந்த சுகுமாரன் (40) மற்றும் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் நந்தகுமார் (33) இவர்கள் டெல்லியில் ஏற்றுமதியாளர் கூட்டத்திற்காக கடந்த திங்களன்று கோவையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர்.

இந்நிலையில் திங்களன்று மதியம் முதல் மாலை வரை டெல்லியில் உள்ள தனியார் பிரபல விடுதியில் நடந்த ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டத்தை முடித்து விட்டு திங்களன்று இரவு டெல்லி கரோல் பார்க் பகுதியிலுள்ள அர்பிட் பேலஸ் உணவு விடுதியில் தங்கியுள்ளனர். அந்த உணவு விடுதியில் செவ்வாயன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல மாநிலங்களை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் திருப்பூரை சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் இருவரின் உடல்கள் சொந்த ஊரான திருப்பூருக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று இரவு சுமார் 12 30 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லியிலிருந்து அவர்களது உடல்கள் கோவை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் சூலூர் மண்டல துணை வட்டாட்சியர் இந்திரா தீ விபத்தில் பலியான நந்தகுமார் உடலை அவருடைய உறவினர்களிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் அவருடைய உடலை திருப்பூர் துணை வட்டாட்சியாளர் கோவிந்தராஜ் அவர்கள் அவருடைய நண்பரிடம் ஒப்படைத்து உடல்களை பார்த்து இருவீட்டாரும் கதறி அழுததை பார்த்து அங்கிருப்பவர்கள் வேதனையடைந்தனர். இவர்கள் இரு உடல்களையும் எடுத்துக்கொண்டு அரசு உறுதி மூலம் அவர்களது ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க