• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்

February 13, 2019 தண்டோரா குழு

காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை காந்திபுரம் பகுதியில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் cகிராஸ்கட் சாலையில் ஊர்வலமாக சென்று காதலர் தின எதிர்ப்பு முழக்கமிட்டனர். அப்போது காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்த அவர்கள் அவற்றை தீயிட்டு எரிக்கும் செருப்பால் அடித்தும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் காதலர் தினத்தின் போது காதல் என்ற பெயரில் அத்துமீறும் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். காவல்துறையினரின் அனுமதியை மீறி ஊர்வலமாக சென்றது போராட்டம் நடத்திய சுமார் 55 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க