• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் சீண்டல் – மாணவர்கள் போராட்டம்

February 13, 2019 தண்டோரா குழு

கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை க.க.சாவடி ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். குறிப்பாக கேரளாவை சேர்ந்த மாணவர்கள் அதிகமாக படிக்கின்றார்கள். இந்நிலையில் அந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் துறை சார்ந்த வகுப்புகள் எடுக்கும் போது மாணவிகளை பாலியல் சீண்டல் செய்வதாக கூறி மாணவ, மாணவியர்கள். உள்ளிருக்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மேலும், செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றார்கள். நாம் அங்கு படிக்கும் சில மாணவர்களிடம் விசாரித்ததில் இதுபோல் அடிக்கடி நடப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை அழைத்து சமரசம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்கள்.

மேலும் படிக்க