• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மக்களிடையே பாஜகவிற்கான ஆதரவு பெருகி உள்ளது – முரளிதர ராவ்

February 12, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் மக்களிடையே பாஜகவிற்கான ஆதரவு பெருகி உள்ளது என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள இந்திய தொழில் வரத்தக சபையின் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஜவுளித்துறையினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜகவில் இணைந்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், ஜவுளித்துறையினர் தங்களது கோரிக்கைகளை விளக்கியதுடன், மனுவாகவும் அளித்தனர்.

அப்போது பேசிய பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ்,

தொழில்முனைவோர்கள் தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள். அதில் தனியார் துறை மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது அவசியமானது. 2019 தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தயாரிக்கவுள்ள குறும்படத்திற்காக பாரத் மன்கீ பாத் மோடி கே சாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு துறைகளை சேர்ந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, அருணாச்சலம் முதல் குஜராத் வரையிலான 10 கோடி மக்களிடம் தகவல்களை பெற முனைந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்காக அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர். பாஜக ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள் இல்லை. மோடி மாநில அரசுக்கு அறிவுரை வழங்கினால், மாநில அரசு மோடி அரசுக்கு துணை நிற்க மாட்டார்கள் என்பதால் மோடிக்கு தனி வலிமையை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் 360 டிகிரி வளர்ச்சி இருக்கும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகள் முக்கியமானவை. மக்களுடன் மோடிக்கான தொடர்பு அதிகரித்திருப்பதால் தமிழகத்தில் மக்களிடையே பாஜகவிற்கான ஆதரவு பெருகி உள்ளது. நட்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வளர்ச்சி மற்றும் நேர்மறையான அரசியல் வழங்கும் வகையில் பாஜக தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும். தம்பிதுரை பேச்சு அதிமுக தலைமையிலிருந்து வரவில்லை. கூட்டணி பொருத்தவரை எந்த கட்சியிடனும் பிரச்னை இல்லாமல் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க