• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் அருண் ஜெட்லி

February 9, 2019 தண்டோரா குழு

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொண்டு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று இந்தியா திரும்பியுள்ளார்.

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உயர் சிகிச்சைக்காக கடந்த ஜனவரி 15-ம் தேதி அமெரிக்கா சென்றார். இதனையடுத்து அவர் வகித்து வந்த நிதி அமைச்சக பொறுப்பு, தற்காலிகமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்கப்பட்டது. அவரும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

எனினும், சிகிச்சை முடிந்த பின், சில நாட்கள் அமெரிக்காவிலேயே ஓய்வெடுத்த ஜெட்லி, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அறிக்கை வெளியிட்டார்.இந்நிலையில், அருண் ஜெட்லி 3 வார சிகிச்சைக்கு பின் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். மேலும், தாயகம் திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க