• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் – தமிழிசை

February 8, 2019 தண்டோரா குழு

தமிழக பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

தமிழக அரசின் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக இன்று பேரவையில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரை இரண்டரை மணி நேரமாக நடைபெற்றது.

தமிழக பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழக பட்ஜெட் விவசாயத்தையும், விவசாயிகளையும் கவனத்தில் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் படிப்பிற்கு உதவித்தொகை, அப்துல்கலாம் பெயரில் கல்லூரி, கஜா புயலால் பாதித்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.

ஸ்டாலின் பட்ஜெட்டில் குறிப்பிடப்படுள்ளதை பார்ப்பதே இல்லை. முன்னரே முடிவு செய்துவைத்துக் கொண்டு குறைகூறுகிறார். தமிழக பட்ஜெட்டை முழுமையாக படிக்காமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து கூறியிருக்கிறார்” என அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க