• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடும்பத் தகராறு காரணமாக 150 அடி செல்போன் டவரில் இருந்து குதித்து கூலித்தொழிலாளி தற்கொலை

February 8, 2019 தண்டோரா குழு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குடும்பத் தகராறு காரணமாக, 150 அடி உயரமுள்ள உயர்மின் அழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி அடுத்த செல்வாய்பாளையம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷூக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்தது வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று மீண்டும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் அருகில் உள்ள 150 அடி உயர உயர்மின் கோபுரம் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக ரமேஷ் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து , ரமேஷூடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்பு அவரின் மனைவி குழந்தைகளை அழைத்து வந்து செல்போன் முலம் பேச வைத்து அவரின் மனதை மாற்ற முயற்சி செய்தனர்.

5 மணிநேரமாக நடைபெற்ற சமரச முயற்சி பலனளிக்காததால் உயர்மின் கோபுரத்தில் இருந்து ரமேஷ் கீழே குதித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் ரமேஷின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ரமேஷ் உடலை பார்த்து, அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க