• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்ன வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது – டெல்லி உயர்நீதிமன்றம்

February 8, 2019 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை டெல்லி உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. மூன்று அணியினரும் இரட்டை இலை சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதற்கிடையில் ஒபிஎஸ், ஈபிஎஸ் ஒன்றாக இணைந்தது.

இதனால் தினகரன் அணி மற்றும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி இரட்டை இலை சொந்தம் கொண்டாடியது. பின்னர் நடைபெற்ற பல கட்ட விசாரணைக்கு பிறகு இறுதியில் நவம்பர் 23,2017 அன்று அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான காரணங்களையும் வெளியிட்டது.

இந்நிலையில் தினகரன் அம்மா மக்கள் முனேற்ற கழகம் என்ற தனி கட்சிய தொடங்கினார். இருப்பினும் இரட்டை இலையை மீட்டு அதிமுகவை கைப்பற்றுவது தான் எனது குறிக்கோள் என்று கூறும் சசிகலா, தினகரன் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மேலும் படிக்க